Saturday, 29 November 2025

பொறுப்பற்ற மக்கள் இயற்கையின் வடிகால் அமைப்புகளை மதிக்காமல் , பொறுப்பற்ற முறையில் இயற்கையை அழித்ததன் விளைவாக இயற்கையாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன. 


பொறுப்பற்ற  அரசாங்கத்திடம் புவியல் நிலமை சாா்ந்த முறையான திட்டமிடல் இல்லாததால் வெள்ளப்பெருக்குகள்  ஏற்படுகின்றன.  


இயற்க்கை நியதி படி தண்ணீர்   தனெக்கென்று பாதை அமைத்துக் கொண்டு பள்ளம் நோக்கித்தான் பாயும்.  ஆனால் நாம் பள்ளம் நோக்கி பாய்கின்ற தண்ணீர்  பாதையினை பலவழிகளில் அடைத்து உள்ளதனால் அடிக்கடி வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன.

வயல் நிலங்களில் வீடுகள்,  உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள், தியேட்டா்கள் கட்டியதால், நீர் வழித் தடங்கள் அடைபட்டு, நிலம் நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் மூழ்கி, பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

வீட்டை சுற்றி மதிகள் கட்டியதனால் ல் நீா் ஓட்டங்கள் தடைப்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டன.  மேலும் வீட்டை சுற்றி  அழகு படுத்தும் சீமெந்து மேடை போட்டதால் பூமி நீரை  உறிஞ்ச விடாமல் தடுத்ததனால் நீரை சேமிக்கும் பூமியின் திறனை   இல்லாமல் செய்ததன் விளைவாக வீட்டை சுற்றி நீர் தேங்கி குளமாக மாறி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


சீமெந்து மேடை அமைத்து அதன் மேல் காப்பற்  வீதி அமைத்ததனால் நீர் வழித் தடங்கள் அடைபட்டு, நிலம் நீர் தேங்கி குளமாக மாறி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.  அழிந்து போன குளங்களை நவீன முறையில் ஆழப்படுத்தி மீள்கட்டுமாணம் செய்யாமல் விட்டதன் விளைவு இன்றைய வெள்ளப் பெருக்கு. 

மரங்கள் மற்றும் தாவரங்கள் இயற்கையான வடிகாலாக செயல்படுகின்றன. அவை மழைநீரை உறிஞ்சி, மண்ணை நிலையாக வைத்திருக்கின்றன. காடுகளை அழிப்பதால், நீர் வேகமாக தரையில் பாய்ந்து ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. 

அரசு,  பாராளமன்றம், நகர சபைகள், கிரம சபைகள்போன்ற ஏனைய கட்டமைப்புகள், அரசின் நிா்வாக கட்மைப்புகள்,   சகல தினைக் களங்களின்  ஊழியா்கள், சகல தோ்தல்களஇலும் மக்களினால் தொிவு செய்யப்பட்ட உறுப்பினா்கள் அனைவரம் அனைத்து விடயங்களுக்கும் பொறுபு கூறவேண்டியவா்கள்.

தமிழ்சுடா், தமிழ்தேசியம்.





No comments:

Post a Comment